காலைத் தியானம் – மே 28, 2021

யோனா 2: 1 – 10    

கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார்

யோன தன்னைக் கடலுக்குள் தூக்கிப் போடும்படி சொன்னபோது, தன்னால் பிழைக்கமுடியும் என்ற எண்ணமே அவனுக்கு இருந்திருக்க முடியாது. யோனா மரிக்கத் தயாராக இருந்தான். கர்த்தரோ வேறே திட்டம் வைத்திருந்தார். யோனா நொருக்கப்பட்டபோதிலும் மடியவில்லை. யோனா திருந்துவதற்காக, கர்த்தரை நோக்கித் திரும்புவதற்காக அவனுக்குக்  கொடுக்கப்பட்ட தருணம்தான் மீனின் வயிறு. யோனா அதை முற்றிலும் பயனுள்ளதாய் உபயோகித்துக் கொண்டான். மீனின் வயிற்றிலிருந்து அவன் செய்த ஜெபத்தைக் கவனியுங்கள். நீ கர்த்தரிடம் திரும்பும்படி உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தருணத்தை எப்படி உபயோகிக்கிறாய்? நீ அழிந்து போவது கர்த்தருடைய விருப்பம் அல்ல. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தருணத்தை வீணாக்காமல் கர்த்தரிடம் திரும்புவது உன்னுடைய வேலை.

ஜெபம்

ஆண்டவரே, உம்மைவிட்டு விலகி ஓடாமல், உம்மிடம் திரும்பி வர எனக்கு உதவி செய்யும். ஆமென்.