யோனா 3: 1 – 5
இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி
கர்த்தர் நமக்கு இரண்டாம் தருணங்களைத் தருகிறவர். அவர் யோனாவிடம் இரண்டாம் முறை பேசினார். இந்த முறை யோனா, கர்த்தர் சொன்னதைச் செய்தான். அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே பிரசங்கித்தான். கர்த்தர் யோனாவுக்கு மாத்திரமல்ல, நினிவே மக்களுக்கும் இரண்டாம் தருணத்தைக் கொடுத்தார். யோனாவுக்கும், நினிவே மக்களுக்கும், வேதத்தில் நாம் பார்க்கிற அநேக மக்களுக்கும் இரண்டாம் தருணத்தைக் கொடுத்த ஆண்டவர், உனக்கும் எனக்கும் கூட இரண்டாம் தருணத்தைக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை நீ கீழே விழுந்திருந்தால் சோர்ந்து போகாமல் எழுந்திரு. கர்த்தருடைய கிருபையின் மேல் மாத்திரம் உன் நம்பிக்கையை வைத்து கர்த்தரிடத்திற்குத் திரும்பு. அவர் உன்னை அணைத்து வரவேற்க தயாராக இருக்கிறார்.
ஜெபம்
ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்துள்ள இரண்டாம் தருணத்திற்காக நன்றி சுவாமி. ஆமென்.