காலைத் தியானம் – மே 30, 2021

யோனா 3: 6 – 10    

இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது

                              யோனா அரைகுறை மனதுடன் செய்த பிரசங்கம் எத்தனைபேரை நேரடியாகச் சென்றடைந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த செய்தி ராஜாவின் காதுகளை எட்டியவுடன் ஒரு அற்புதம் நடக்கிறது. ராஜா நினிவேயின் மக்கள் அனைவரும் உபவாசித்து, ஜெபித்து, மனந்திரும்பும்படி கட்டளையிடுகிறான்.  மக்களும் கீழ்ப்படிகிறார்கள். நினிவே பட்டணமே இரட்சிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் ரோமர்களால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் என்று ரோமர்கள் தீர்மானித்திருந்தார்கள். கர்த்தர் கான்ஸ்டான்டைன் என்னும் ரோம அரசனைச் சந்தித்தார். அதின் விளைவாக ரோமாபுரியே கிறிஸ்தவர்களின் தலைநகரமாக மாறியது. நம் நாட்டு தலைவர்களுக்காகவும், உலக நாடுகளின் தலைவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டியது நம்முடைய கடமை. கர்த்தர் அவர்கள் மூலமாக கோடிக்கணக்கான மக்களை இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.                                 

ஜெபம்

ஆண்டவரே, எங்கள் தலைவர்களைச் சந்தியும். அவர்களுடைய இருதயங்களை நேர்வழிப்படுத்தும். அவர்களை இரட்சியும். ஆமென்.