யோனா 4: 1 – 11
யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது
இதை சுய நலம் என்று சொல்லுவதா அல்லது சுயநீதி என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. தனக்கு இரண்டாம் தருணம் வேண்டும். ஆனால் நினிவே மக்கள் அழிய வேண்டும்! இதென்ன நியாயம்! அதுதான் மனித உள்ளத்துக்கும் ஆண்டவருடைய உள்ளத்துக்கும் உள்ள வித்தியாசம். யோனா நினிவே மக்களின் நன்மையைக் கருதி அவர்களிடம் கர்த்தருடைய வசனத்தைக் கூறவில்லை. ஏதோ கர்த்தர் சொன்னார் என்பதால் செய்தான். கர்த்தர் அப்படிப்பட்ட செயலைக் கூட ஆசீர்வதித்தார். கர்த்தர் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத, அறியாமையிலிருந்த 120 ஆயிரம் நினிவே மக்களுக்காக பரிதபித்தார். அவர் நமது நாட்டிலிருக்கும் 130 கோடி மக்களுக்காக பரிதபிக்காமல் இருப்பாரோ? ஆண்டவருக்காகப் பேசும் யோனாக்கள் இன்றும் தேவை. மற்றவைகளை அவர் பார்த்துக் கொள்ளுவார்.
ஜெபம்
ஆண்டவரே, யோனாவைப் போல என்னையும் உபயோகியும். ஆமென்.