காலைத் தியானம் – ஜூன் 02, 2021

மீகா 1: 3 – 10    

மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும்

                              இன்று உலகம் முழுவதும் கோவிட்-19 என்ற தொற்று நோயின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது.  நமக்கு அருமையானவர்கள் அநேகரை இளவயதில் இழக்கிறோம். நேற்று வரை மலையைப் போல உறுதியாய் இருந்தவர்கள் இன்று இல்லை. இதற்கு காரணம் சீனாதான் என்று நம்மில் சிலர் சொல்லலாம். அல்லது மக்களின் மெத்தனம், அல்லது அரசாங்கத்தின் திறமையின்மை என்று கூட நாம் நினைக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களில் ஓரளவு உண்மை இருந்தாலும் கோவிட்-19 என்னும் பெருந்தொற்று நம் கர்த்தரால் அனுமதிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2800 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேலரிடம் காணப்பட்ட அதே பாவ வாழ்க்கை நம்மிடமும் காணப்படுகிறதோ? நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்றால் நீதிமான்களாக வாழ்கிறோமா? அல்லது தேவைக்கு மாத்திரம் கர்த்தரை உபயோகிக்க முயற்சி செய்கிறோமா? கர்த்தரிடம் இரக்கத்துக்காகக் கெஞ்சுவதற்கு முன், உன் வாழ்க்கையை ஆராய்ந்துபார். இன்றைய நிலைக்கு யார் காரணம்? ஆண்டவர் உன்னைப் பார்த்து என்ன சொல்லுகிறார்?                            

ஜெபம்

ஆண்டவரே, என்னை மன்னியும். இன்று நான் என் சிந்தையாலும் செயலாலும் பாவம் செய்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். எங்கள் மீது இரங்கும். கோவிட்-19 என்னும் இந்த கொடிய நோயை இவ்வுலகிலிருந்தே அழித்துபோடும். ஆமென்.