காலைத் தியானம் – ஜூன் 03, 2021

மீகா 1: 11 – 16    

நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி

                               நம்முடைய பிள்ளைகளுக்கு நாம்தான் பிரதான முன்மாதிரி. நாம் பேசும் விதமாக அவர்கள் பேசுவதைப் பார்க்கிறோம். நாம் செயல்படும் விதமாகவே அவர்கள் செயல்படுவதையும் நாம் அறிவோம். நாம் இயேசு கிறிஸ்துவோடு நெருங்கி வாழ்ந்தால், அவர்களும் அவ்வொழுக்கத்தைப் பிடித்துக் கொள்வார்கள். நம்முடைய பிள்ளைகள் மாத்திரமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் இன்னும் அநேகர் நம்மைத் தங்களுடைய முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். நீ எப்படிப்பட்ட முன்மாதிரியாக இருக்கிறாய்? அவர்கள் இடறி விழுவதற்கு நீ காரணமாக இருந்துவிடக்கூடாது. லூக்கா 17: 1, 2 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.  “இடறல்கள் . . . .  எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! அவன் இந்த சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.” பிறரின் பாவத்துக்கு நீ காரணியாயிருந்து விடாதே.                       

ஜெபம்:

ஆண்டவரே, நான் அறியாமல்கூட யாருக்கும் இடறலாயிருந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.