மீகா 2: 6 – 11
தீர்க்கதரிசனஞ்சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்
கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையும் அவருடைய கிருபையையும் குறித்து கேட்க ஆசைப்படும் நமக்கு அவருடைய எச்சரிப்புகளைக் கேட்க மனதில்லை. ஆண்டவர் கொடுக்கும் பொருளாதார ஆசீர்வாதங்கள் மீது ஆசைப்படும் நமக்கு, அவர் நம்மைக் கண்டித்து ஒழுக்கப்படுத்துவதில் விருப்பமில்லை. ஆகையால்தான் மீகாவின் நாட்களில் இருந்ததுபோல, இன்றும் மக்கள் கேட்க விரும்புவதை மாத்திரம் பிரசங்கிக்கும் மனிதர்கள் அநேகர் இருக்கிறார்கள். மனிதரைப் பிரியப்படுத்த விரும்பும் பிரசங்கிமார் பாவத்தைக் குறித்தும், பாவத்தின் விளைவுகளைக் குறித்தும், மனந்திரும்புதலின் அவசியத்தைக் குறித்தும், பரிசுத்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசத் தயங்குவார்கள். ஆண்டவர் உன்னை உடைத்து, நொறுக்கி, ஒழுக்கப்படுத்துவது உன்னைச் செம்மையான பாதையில் அழைத்துச் செல்வதற்கே. அதை வெறுக்காதே.
ஜெபம்:
ஆண்டவரே, நீர் பேசுவதைக் கேட்கும் வாஞ்சையையும் மனப்பக்குவத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.