காலைத் தியானம் – ஜூன் 07, 2021

மீகா 3: 1 – 4    

என் ஜனத்தின் சதையைத் தின்று   

 மீகா தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர், அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் தலைவர்கள் மக்களை ஒடுக்குவதையும், சுயநலனுக்காக அவர்களை அநியாயமாக மிதித்து மேலே ஏறிச் செல்வதையும் கண்டிக்கிறார். சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்கள் ஆண்டவருடைய இருதயத்தை உடைக்கின்றன. கடந்த முப்பது வருடங்களில் நமது தேசத்தில் பலவித பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த முன்னேற்றத்தின் பலன் சமுதாயத்தின் ஒரு பகுதியினரை மாத்திரமே சென்றடைந்திருக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இருக்கும் இடைவெளி வெகுவாக விரிந்துவிட்டது. ஏழைகளின் உழைப்பை சுயநலனுக்காக உபயோகிக்கும் மற்றவர்களே இதற்குக் காரணம். நீ பிறரை உன் சுநலனுக்காக உபயோகிக்கிறாயா? படித்து முன்னேறவேண்டிய சிறுவர்களை உன் வீட்டு வேலைக்கென்று வைத்துக் கொள்ளுகிறாயா? சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறாயா?                                                                                                

ஜெபம்:

ஆண்டவரே, என்னைச் சுற்றியிருக்கும் ஒடுக்கப்படும் மக்களின் நலனுக்காகப் பாடுபட எனக்கு உதவி செய்யும். ஆமென்.