காலைத் தியானம் – ஜூன் 08, 2021

மீகா 3: 5 – 8    

நானோ . . கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும் நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன் 

 மீகாவின் ஊழியத்திற்கு நிச்சயமாக சமுதாயத்தில் மிகுந்த வரவேற்பு இருந்திருக்கமுடியாது. எதிர்ப்புகளின் மத்தியில் செய்யப்பட்ட அவருடைய ஊழியம் பரிசுத்த ஆவியானவர் அருளிய பெலத்தினால் மாத்திரமே சாத்தியமாயிற்று. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்கள் உலகத்தின் பலபகுதிகளுக்கும் சென்று நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்பாக, பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருக்கும்படி கட்டளையிட்டார் (அப்  1: 4-8).  நாம் நம்முடைய சொந்த அறிவையும், பெலனையும், மன உறுதியையும் நம்பி அநியாயத்தைத் தட்டிக் கேட்க கிளம்பிவிடக்கூடாது. பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்துக்காகக் காத்திருந்து, ஜெபித்து, அவர் கொடுக்கும் பெலனையும் ஞானத்தையும் பெற்ற பின்னரே செயல்படவேண்டும். பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் பெலத்தையும் ஞானத்தையும் மாத்திரமே நம்பியிருக்கக் கற்றுக் கொள்.                                                                                                

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அபிஷேகத்தால் என்னை நிரப்பி வழிநடத்தும். ஆமென்.