காலைத் தியானம் – ஜூன் 09, 2021

மீகா 3: 9 – 12    

அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்

பரிதானம் என்றால் லஞ்சம் என்று அர்த்தம். லஞ்சத்துக்குப் புரட்டப்படும் நியாயமும், பொருளாதார ஆதாயத்துக்காக எதைவேண்டுமானாலும் சொல்லும் பிரசங்கிமாரும், பணத்துக்காகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளும் இன்றும் நம் மத்தியில் இருப்பதைக் காண்கிறோம். நான் இவைகளைச் செய்வதில்லை என்று உன்னை நீயே சமாதானம் செய்துகொள்ளுகிறாயோ? இந்தத் தவறுகளை நீ செய்யாவிட்டாலும், அவைகள் நிலைத்து நிற்பதற்கும் வளருவதற்கும் நீ காரணமாயிருக்கிறாயா என்பதை யோசித்துப் பார். லஞ்சம் கொடுக்காமல் இந்தக் காலத்தில் எப்படி வாழ முடியும் என்று சொல்லுகிறவர்கள் எத்தனைபேர்! வாழ்க்கையில் ஒரு கடினமான சூழ்நிலைவந்துவிட்டால், ஆண்டவரிடம் ஓடாமல் குறி சொல்லும் தீர்க்கதரிசிகளிடம் ஓடுகிறவர்கள் எத்தனைபேர்! அப்படிச் செய்கிறவர்களும் இன்று வாசித்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு உடந்தையாகிவிடுகிறார்கள்.                                                                                                                         

ஜெபம்:

ஆண்டவரே, சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு நான் உடந்தையாயிருந்துவிடாமல், அவற்றை எதிர்க்கும் கருவியாக செயல்பட எனக்கு உதவி செய்யும். ஆமென்.