மீகா 4:6 – 13
கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும் அவருடைய யோசனையை உணராமலும்
கர்த்தருடைய விருப்பத்திற்கு மாறாக, தங்களுக்கும் மற்ற நாடுகளைப் போல ஒரு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து இஸ்ரவேல் ஜனங்கள் சவுலை ராஜாவாகப் பெற்றார்கள். சாலொமோன் ராஜாவின் காலத்திற்குப் பின் வந்த ராஜாக்கள் கர்த்தரைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். ராஜாவால் தங்களுக்கு பாதுகாப்பு வரும் என்று எதிர்பார்த்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. பாபிலோனியரால் சிறைப்பிடிக்கப்படும்போது ராஜாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆகையால்தான் கர்த்தர் ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ என்று கேட்கிறார் (வசனம் 9). அப்படி ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆண்டவர் ஒரு மீட்பின் திட்டம் வைத்திருந்தார். ஜனங்களோ கர்த்தருடைய நினைவுகளை அறியவில்லை. இன்றும் கோவிட்-19 தாக்குதலினால் உலக நாடுகளின் அரசாங்கங்கள் என்ன செய்வதென்று திகைக்கும் இந்நிலையில், நம்மை மீட்க நிச்சயமாகக் கர்த்தருடைய திட்டம் ஒன்று இருக்கும். கர்த்தருடைய நினைவுகளை அறிந்துகொள்ளும் கிருபையை அவர் நமக்குத் தருவாராக.
ஜெபம்:
ஆண்டவரே, உமது நினைவுகளை அறிந்துகொள்ளும் கிருபையை எனக்குத் தாரும். ஆமென்.