காலைத் தியானம் – ஜூன் 12, 2021

மீகா 5:1 – 6    

பெத்லகேமே . . .  இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்   

முதலாம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் இஸ்ரவேலின் நியாயாதிபதி, நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றியபோது இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த சிதேக்கியாவைக் குறிக்கும். சிதேக்கியா தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்த கடைசி ராஜா. அதற்குப் பின் தாவீதின் வம்சத்தில் மனிதனாக பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனம் இரண்டாம் வசனம் முதல் உள்ள வேதபகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்பதைத் துல்லியமாக முன்னுரைத்தவர்  மீகா. அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது என்ற வார்த்தைகள் (வசனம் 2), இயேசு கிறிஸ்துவின் நித்தியத் தனமையைக் குறிக்கின்றன. இவரோ சமாதானக் காரணர் என்னும் வார்த்தைகள் (வசனம்   ) சமாதானப் பிரபு என்று ஏசாயா தீர்க்கதரிசியால் முன்னுரைக்கப்பட்ட வார்த்தைகளோடு ஒத்துப் போகின்றன. வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில் பல துல்லியமாக நிறைவேறிவிட்டன. வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிப்புகளை அலட்சியப்படுத்தாதே.                                                                                                                      

ஜெபம்:

ஆண்டவரே,  தீர்க்கதரிசிகள் மூலமாக நீர் கொடுத்திருக்கும் வார்த்தைகளுக்காக நன்றி சுவாமி. ஆமென்.