காலைத் தியானம் – ஜூன் 15, 2021

மீகா 6:9 – 16    

கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுமுள்ள பையும் இருக்கும்போது                     

கள்ளத்தராசு வைத்திருப்பவனை எப்படி சுத்தமுள்ளவன் என்று சொல்ல முடியும் என்று கர்த்தர் கேட்கிறார். நாம் பலவிதத்திலும் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தாலும், வாழ்க்கையின் சில பகுதிகளில் கர்த்தருக்குப் பிரியமில்லாதவைகளைச் செய்து வருகிறோமோ என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். கர்த்தருக்கு நம் இருதயத்தின் ஒரு பகுதியைக் கொடுப்பது போதாது. இருதயத்தின் பெரும்பகுதியைக் கொடுப்பதுகூட அவருக்கு மனமகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. அவருக்கு உன்னுடைய முழு இருதயமும், முழு பெலனும், முழு மனதும் வேண்டும்.  நாம் ஆலயம் சென்று அவரைத் தொழுதுகொள்வதிலும், ஜெபிப்பதிலும், வேதம் வாசிப்பதிலும், காணிக்கைக் கொடுப்பதிலும் குறைவில்லாமலிருக்கலாம். ஆனால் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் உண்மையாயிருக்கிறோமா?  வருமான வரி கட்டுவதில் நேர்மையாயிருக்கிறோமா? உன் வாழ்க்கையில் ஏதாவது இருட்டுப் பகுதிகள் இருக்கின்றனவா?                                                                                                                    

ஜெபம்:

ஆண்டவரே, என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளும் உமக்குப் பிரியமானவைகளாக இருக்கும்படி வாழ எனக்கு உதவி செய்யும்.  ஆமென்.