காலைத் தியானம் – ஜூன் 16, 2021

மீகா 7:1 – 7    

தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப் போனான்                             

இன்றும் உலகில் நேர்மையானவனையும் உண்மையுள்ளவனையும் காண்பது அரிதாக இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஊழல், அநியாயம், அட்டூழியம் போன்றவைகளைத்தான் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை வைத்திருக்கும் கிறிஸ்தவர்களே தங்கள் நல்ல நோக்கத்தை நிறைவேற்ற, சூழ்நிலைக்கு ஏற்றபடி வளைந்துகொடுத்துதான் வாழவேண்டும் என்று நினைக்கும் காலம் இது. (இது தவறு.) சிநேகிதனைக் கூட நம்பமுடியாமல் தவிக்கும் காலம் இது. சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தீமை செய்துவரும் காலம் இது. குடும்பங்களுக்குள் அமைதியில்லாத காலம் இது. கணவன் மனைவி உறவுகளில் விவாகரத்து மலிந்துவிட்ட காலம் இது. இந்நாட்களில் 7ம் வசனத்தில் சொல்லியிருப்பதைப் போல கர்த்தரை நோக்கிக் கொண்டு, நம்முடைய இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பதைத் தவிர நாம் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை.                                                                                                                    

ஜெபம்:

ஆண்டவரே, உலகத்தைப் பார்த்து நானும் கெட்டுப் போய்விடாதபடி உம்மீதே என் கண்கள் பதிந்திருக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.