காலைத் தியானம் – ஜூன் 18, 2021

நாகூம் 1: 1 – 6       

கர்த்தர் உக்கிரக் கோபமுள்ளவர் . . . நீடிய சாந்தமும் மிகுந்த வல்லமையுமுள்ளவர்                                 

நாகூம் தீர்க்கதரிசியின் புத்தகம் கி.மு. 663ம் ஆண்டிற்கும் 612ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பிய நினிவே மக்கள் 100 வருடங்களுக்குள் (அதாவது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்குள்) மறுபடியும் பாவ வாழ்க்கையில் மூழ்கிவிட்டார்கள். அவர்களுக்கு விரோதமாக நாகூமின் மூலமாகக் கர்த்தர் சொன்ன வார்த்தைகளை இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தில் வாசிக்கிறோம். கர்த்தருடைய கோபத்துக்கு ஆளான நினிவே மக்கள், அவர்களுக்குக் கிடைத்தத்  தருணங்கள் அனைத்தையும் வீணாக்கிவிட்டார்கள். உன் பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவினால் சுத்தமாக்கப்பட்ட நீ, உம் பிள்ளைகளுக்காகவும், அவர்களுக்குப் பின்வரும் தலைமுறைகளுக்காகவும் ஜெபிக்கிறாயா?                                                                                                                  

ஜெபம்:

ஆண்டவரே, எனக்குப் பின் வரும் தலைமுறைகளையும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கிக் காத்தருளும். ஆமென்.