காலைத் தியானம் – ஜூன் 19, 2021

நாகூம் 1: 7 – 10       

தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்                                   

நாகூம் தீர்க்கதரிசியின் நாட்களில் நினிவே இருந்தது போல்தானே இன்று நம்முடைய தேசமும் இருக்கின்றது! எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம், பாவ வாழ்க்கை! திருச்சபையில் கூட எத்தனைவிதமான அட்டூழியங்கள்! வேதாகமத்தின் போதனைகளை, அதாவது கர்த்தரின் வார்த்தையை அலட்சியப் படுத்தும் மக்களின் கையில்தானே அநேக ஆலயங்களின் நிர்வாகம் சிக்கியுள்ளது! இப்படிப்பட்ட தீமைகளை அனுமதிக்கும் கர்த்தரை நான் ஏன் பின்பற்றவேண்டும் என்று நினைக்காதே. அவரை நம்புகிறதில் எந்தவித பயனும் இல்லை என்று சொல்லி மற்றவர்களைப் போல பாவ வாழ்க்கைக்குத் திரும்பிவிடாதே. கர்த்தர் அவரை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். உன்னையும் அவருக்குத் தெரியும். ஒவ்வொரு தலைமுறையிலும் தனக்குப் பிரியமானவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அவர் ஏக்கத்துடன் தேடிக்கொண்டேயிருக்கிறார்.  2 நாளாகமம் 16: 9, நீதிமொழிகள் 15: 3 ஆகிய வசனங்களை எடுத்து வாசித்துப் பாருங்கள்.                                                                                                                

ஜெபம்:

ஆண்டவரே, என் சூழ்நிலகள் என்னை உம்மிடமிருந்து பிரித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.