காலைத் தியானம் – ஜூன் 20, 2021

நாகூம் 1: 11 – 15       

இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது                                   

ஒடுக்கப்பட்ட யூதாவுக்கு சமாதானம் வரும் என்ற தீர்க்கதரிசன வார்த்தைகள், ஒடுக்கிய நினிவேயின் அழிவின் மூலமாக கி.மு. 612ல் நிறைவேறியது. துஷ்டன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான் என்ற வார்த்தைகள், நினிவே முழுவதுமாக அழிக்கப்பட்டதில் நிறைவேறியது. பூமிக்கு அடியில் புதைந்துவிட்ட நினிவேயின் இடிபாடுகள்கூட 1845ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டன.  நினிவே அழிக்கப்பட்டதின் மூலமாக யூதாவுக்கு ஒரு சமாதானம் கிடைத்தது என்றாலும், அந்த சமாதானம்கூட நிரந்தரமற்றதுதான்.  நம் அனைவருக்கும் நிரந்தரமான சமாதானத்தைக் கொடுக்கிறவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவரே நம் உள்ளத்தில் சமாதானத்தைக் கொடுக்கிறவர். இவ்வுலகத்திலுள்ள அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணனாகிய சாத்தான் முற்றிலுமாக அழிக்கப்படும் காலம் விரைவில் வரும். பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஒரு வார்த்தைகூட நிறைவேறாமல் போனதில்லை.                                                                                                              

ஜெபம்:

ஆண்டவரே, அக்கிரமங்கள் சூழ்ந்த இந்நாட்களில் உமது சமாதானத்தை எனக்கும் தாரும். ஆமென்.