காலைத் தியானம் – ஜூன் 21, 2021

நாகூம் 2: 1 – 5       

வெறுமையாக்குகிறவர்களை வெறுமையாக்கி                              

நினிவேயைத் தலைநகராகக் கொண்ட அசீரியா நாடு, கி.மு. 722ம் ஆண்டில், வடக்கு ராஜியம் என்றழைக்கப்பட்ட இஸ்ரவேலை ஒடுக்கிக் கைப்பற்றி அங்கிருந்த செல்வத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டது. தெற்கில் இருந்த யூதாவின் மீதும் போர் தொடுத்து, ஒடுக்கி, யூதாவைக் கப்பம் கட்டும்படி செய்தது. இப்படி இஸ்ரவேலையும் யூதாவையும் வெறுமையாக்கின அசீரியா, வெறுமையாக்கப்படும் காலமும் வரும் என்பதுதான் நாகூம் தீர்க்கதரிசியின் வார்த்தை. அது கி.மு. 612ம் ஆண்டில் நிறைவேறியது. பரிசுத்த வேதாகமம் சொல்லும் இவ்வுண்மைக்கு சரித்திரத்தில் பல உதாரணங்கள் உண்டு. பிறருக்கு துன்பம் அல்லது நஷ்டம் உண்டாக்குவதின் மூலம் ஒருவன் செல்வத்தைத் தேடிக்கொண்டால், அவன் அந்த செல்வத்தை இழந்து துன்பத்தைப் பெறுவான் என்பது இன்றைய பாடம்.                                                                                                              

ஜெபம்:

ஆண்டவரே, பிறருக்கு துன்பம் கொடுக்கும் எந்த செயலிலும் நான் ஈடுபடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்.