நாகூம் 2: 6 – 13
அரமனை கரைந்துபோம்
முழுவதும் சங்கரிக்கப்பட்டான் என்று முதலாம் அதிகாரத்தில் வாசித்ததின் முழு அர்த்தத்தை இன்று வாசித்த பகுதியில் பார்க்கிறோம். மனிதனின் வல்லமைக்கு அடையாளமாக இருக்கிற அரண்மனை தரைமட்டமாகிறது (வசனம் 6). செல்வத்திற்கு அடையாளமான வெள்ளியும் தங்கமும் கொள்ளையடிக்கப்படுகின்றன (வசனம் 9). எதையும் சாதித்துவிடலாம் என்று நம்மை நம்பவைக்கும் உடல் பலமும், மன தைரியமும் இல்லாமல் போய்விடுகிறது (வசனம் 10). ஒரு நாட்டின் வலிமை என்று கருதப்படும் ராணுவ பலமும் தலைவர்களின் திறமையும் அழிக்கப்படுகின்றன (வசனம் 13). இவ்வுலகத்தின் செல்வங்களையும் வலிமைகளையும் நம்பாதே. அவைகள் இன்று இருக்கும். நாளை இல்லாமல் போய்விடும். கர்த்தரை மாத்திரம் நம்புகிறவன் கைவிடப்படுவதில்லை.
ஜெபம்:
ஆண்டவரே, உம்மை மாத்திரம் நம்பி வாழும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.