காலைத் தியானம் – ஜூன் 23, 2021

நாகூம் 3: 1 – 19       

அசீரியா ராஜாவே . . . உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்                                              

அசீரியாவால் சர்வாதிகாரத்துடன் ஆளப்பட்ட தேசங்கள் யாவும் அசீரியாவை வெறுத்தன. ஆகையால் அசீரியாவின் வீழ்ச்சியைக் கண்டு அவர்கள் கைகொட்டுவார்கள் என்பது தீர்க்கதரிசனம். ஆனால் அப்படி ஆளப்பட்ட அந்த தேசங்களே அசீரியாவைப் போல வல்லமையாகவும், செல்வத்துடனும், பெரிய பெயருடனும் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டன. நாமும் கருணையில்லாத சர்வாதிகார தலைவர்களை வெறுக்கிறோம். ஆனால் அவர்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரம் நம் கையில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறோம். அநேகத் தருணங்களில் அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும் என்பதை மறந்துவிடாதே. நீ, உன் உத்தரவுக்கு உட்பட்டு வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறாய்? அசீரியா, யூதா, இஸ்ரவேல் போன்ற நாடுகளின் சரித்திரத்தின் மூலமாக படிக்கும் பாடங்களைக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை நாமே சரிசெய்து கொள்ளவேண்டும். தவறு செய்து, அதின் பின்விளைவுகளை அனுபவித்த பின்னரே பாடங்களைப் படிப்பேன் என்று பிடிவாதமாய் இருக்காதே!                                                                                                           

ஜெபம்:

ஆண்டவரே, அசீரியாவின் தலைவர்களும் மக்களும் செய்த குற்றங்களை நான் செய்யாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.