ஆபகூக் 1: 12 – 17
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே
கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். அநீதியும் அருவருப்பும் அவரை நெருங்க முடியாது. ஆகையால்தான் ஆபகூக் தீர்க்கதரிசி கர்த்தரை, சுத்தக் கண்ணன் என்று அழைக்கிறார். இன்று வாசித்த ஆறு வசனங்களில் மறுபடியும் ஆபகூக் தீர்க்கதரிசியின் கேள்விகளைப் பார்க்கிறோம். துன்மார்க்கனாகிய பாபிலோன் நீதிமானென்று எண்ணப்பட்ட யூதாவை விழுங்குவதை எப்படி மகா பரிசுத்தமுள்ள தேவன் அனுமதிக்கமுடியும் என்பது கேள்வி. முதலாவதாக நீதிமான் என்ற சொல்லுக்கு தகுந்தபடி யூதா இருக்கவில்லை. மேலும் யூதாவைக் கர்த்தரிடத்தில் திருப்புவதற்கே பாபிலோன் உபயோகிக்கப்பட்டது என்பதை அந்த காலகட்டத்தில் ஒருவரும் உணரவில்லை. நாம் தண்டிக்கப்படத்தக்க செயல்களைச் செய்யும்போது, நம்மைத் தண்டிக்கவும் திருத்தவும் கர்த்தர் எப்படிப்பட்ட கருவியை உபயோகிக்கிறார் என்பதைக் குறித்து நாம் எப்படி குறை சொல்லமுடியும்?
ஜெபம்:
ஆண்டவரே, உம்மிடத்தில் நாம் திரும்பும்படி என் வாழ்க்கையில் நீர் அனுமதித்திருக்கும் துன்பங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.