ஆபகூக் 2: 5 – 13
கல்லு சுவரிலிருந்து கூப்பிடும்
பாபிலோன் மக்கள் இஸ்ரவேல் மக்களை ஒடுக்கிக் கொள்ளையிட்டு தங்களுக்கு செல்வத்தைச் சேர்த்தார்கள். அப்படி சேர்க்கப்பட்ட செல்வத்தில் ஆசீர்வாதமில்லை. சாபம்தான் இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களும் அவர்களுடைய நகரத்தின் சுவர்களும் பாபிலோனுக்கு விரோதமாகச் சாட்சி சொல்லும் என்று ஆபகூக் தீர்க்கதரிசி சொல்லுகிறார். பணம் அல்லது செல்வம் சேர்ப்பதில் நமக்கு பேராசையும் வெறித்தனமும் வந்துவிடக் கூடாது. பணத்தின்மீது நாம் வைக்கும் மோகத்தையும், தவறான வழிகளில் அதை சம்பாதிப்பதையும் கர்த்தர் வெறுக்கிறார். பணம் சம்பாதிப்பதே தவறு என்று அவர் சொல்லவில்லை. உன்னுடைய ஆண்டவர், உன் குடும்பம், உன் நண்பர்கள் ஆகியோருக்குக் கொடுக்கவேண்டிய இடத்தைப் பணத்துக்குக் கொடுத்துவிடாதே.
ஜெபம்:
ஆண்டவரே, பணத்துக்குத் தவறான முக்கியத்துவத்தைக் கொடுத்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.