காலைத் தியானம் – ஜூன் 29, 2021

ஆபகூக் 2: 14 – 20        

பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்                 

உலகில் இன்னும் இத்தனை கோடி மக்கள் கர்த்தராகிய இயேசுவை அறியாமல் இருக்கிறார்களே என்று கவலைப்படும் விசுவாசிகளுக்கு இது ஆறுதல் தரும் வசனம். கடல் எப்படி தண்ணீரால் நிறைந்திருக்கிறதோ, பூமி அப்படியே கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் என்பது ஆபகூக்கின் அபிப்பிராயம் அல்ல. அது கர்த்தருடைய வார்த்தை. அதை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார். இயேசுவைக் குறித்த இரட்சிப்பின் செய்தியை சொல்லுவது மாத்திரம்தான் நம்முடைய கடமை. விதைகளை விதைப்பதுதான் நம்முடைய கடமை. விளைச்சல்களை உண்டாக்குவது கர்த்தருடைய வேலை.  சோர்ந்துபோகாமல்  நம்முடைய கடமையைச் செய்வோமாக.                                                                                                                                      

ஜெபம்:

ஆண்டவரே, சோர்வில்லாமலும் தயக்கமில்லாமலும் நற்செய்தியை அறிவிக்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.