செப் 2: 1- 15
கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்
பழைய ஏற்பாட்டில் காணப்படும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் எல்லாவற்றிலும் சில காரியங்கள் பொதுவானவை. முதலாவதாக, மக்களின் பாவ வாழ்க்கையைக் குறித்த எச்சரிப்பும், அப்படிப்பட்ட பாவ வாழ்க்கை பரிசுத்தமான நம்முடைய கர்த்தருக்கு எவ்வளவு அருவருப்பானது என்பதும் சொல்லப்பட்டிருக்கும். இரண்டாவதாக அப்படிப்பட்ட மக்களுக்கு வரப்போகும் அழிவைக் குறித்து எச்சரிப்பு இருக்கும். மூன்றாவதாக, மக்கள் மனந்திரும்பினால், கர்த்தர் அவர்களை மன்னித்து, தீங்கிலிருந்து விலக்கிக் காக்க இரக்கமும் அன்புமுள்ளவராயிருக்கிறார் என்பது சொல்லப்பட்டிருக்கும். செப்பனியாவின் தீர்க்கதரிசனம் அதற்கு விதிவிலக்கல்ல. கர்த்தரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள் என்பது செப்பனியாவின் அறிவுரை. அதற்குக் கீழ்ப்படிந்தவர்கள் சிலர். அசட்டைப் பண்ணினவர்கள் அநேகர் என்று சாரித்திரம் சொல்லுகிறது. நீ கீழ்ப்படிகிற சிலரின் கூட்டத்தில் இருக்கிறாயா அல்லது அசட்டைப் பண்ணுகிற அநேகரின் கூட்டத்தில் இருக்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய கோபத்தின் நாளிலே நானும் எனக்கு அருமையானவர்களும் மறைக்கப்படும்படி எங்கள்மீது கிருபையாயிரும். ஆமென்.