செப் 3: 9 – 20
சத்தத்துஅவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்
கர்த்தருடைய பெரிய நாளிலே மனந்திரும்பாத பாவிகளும் அக்கிரமக்காரரும் அழிந்துபோவார்கள். பூமியில் பயங்கரமான அழிவுகளும், அந்தகாரமும் இருக்கும் (செப் 1:15). இரட்சிக்கப்பட்ட பாவிகளோ கர்த்தரால் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். புதிதாக்கப்பட்ட பூமியில் அவர்கள் எப்பொழுதும் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்கு ஆராதனை செய்துகொண்டிருப்பார்கள். நாமும் அக்கூட்டத்தில் இருக்கக் கர்த்தர் கிருபை செய்வாராக. அந்நாட்களிலே, கர்த்தர் நம்முடைய வார்த்தைகளைச் சுத்தமாக்கி, நாம் உலகின் எப்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி நம்முடைய மொழியை ஒருமைப்படுத்துவார். ஆதியாகமம் 11ம் அதிகாரத்தில், பாபேல் கோபுரம் கட்டப்படும்போது எப்படி கர்த்தர் மனிதர்களின் மொழியைத் தாறுமாறாக்கினார் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. புதிய பூமியில் இன்று உலகில் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகள் ஒன்றாக்கப்படும். அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறாயோ? கவலைப்படாதே. அது கர்த்தருடைய வேலை!
ஜெபம்:
ஆண்டவரே, புதிய பூமியில் உம்முடைய பரிசுத்தவான்களோடே சேர்ந்து வாழும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.