காலைத் தியானம் – ஜூலை 07, 2021

ஆகாய் 1: 1 – 4       

இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது          

                             ஆகாய் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் கி.மு. 520 ஆண்டு கர்த்தரால் கொடுக்கப்பட்டது. அழித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்த எருசலேம் ஆலயம் திரும்ப கட்டப்படவேண்டும் என்று கர்த்தர் ஆகாய் மூலமாக தம் மக்களுக்குச் சொன்னதுதான் இப்புத்தகத்தின் மையச் செய்தி. கர்த்தருடைய ஆலயம் பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எப்படி அதைக் கவனிக்காமல் உங்கள் சொந்த நலனுக்காக மாத்திரம் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது கர்த்தர் கேட்ட கேள்வி. இன்று நம்முடைய வாழ்க்கையும் அப்படி தான் இருக்கிறது. நான் பசியாயிருக்கும்போது, வியாதியாயிருக்கும்போது, உடுத்த உடையில்லாமல் இருக்கும்போது (மத் 25: 31-46), நீ எப்படி உன் உணவுக்கும் உடைக்கும் இவ்வளவு செலவழிக்கிறாய் என்று கர்த்தர் கேட்கிறார். உன் பதில் என்ன?                      

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் பணத்தை ஞானத்தோடு உபயோகிக்கக் கற்றுதாரும்.  ஆமென்.