காலைத் தியானம் – ஜூலை 08, 2021

ஆகாய் 1: 5 – 11       

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்          

                             நம்மில் பலருக்கு இந்த அனுபவம் உண்டல்லவா?  கடின உழைப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. சாப்பாட்டுக்குக் குறைவேயில்லை. ஆனால் நன்றாகச் சாப்பிட்ட திருப்தியில்லை. நன்றாகச் சம்பாதிக்கிறேன். ஆனால் பணத் தேவை இருந்துகொண்டேயிருக்கிறது. பிரச்சனை எங்கேயிருக்கிறது? உன் வழியைச் சிந்தித்துப் பார் (வசனம் 7) என்று கர்த்தர் சொல்லுகிறார். நீ உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய். கர்த்தரைப் பற்றியும் அவருக்கு நீ என்ன செய்யவேண்டும் என்பதையும் நினைக்கிறதில்லை. உன் சிந்தனைகளையும் வழியையும் மாற்றிக் கொள். நீ வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்பதை ஆராய்ந்து பார்த்து, கர்த்தருடைய சேவைக்கு முதலிடம் கொடு. அப்போது உன் குறைவுகளெல்லாம் நிறைவாகும்.   உனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாயிருக்கும்.                     

ஜெபம்:

ஆண்டவரே, என் சுய நல சிந்தையை மாற்ற உதவி செய்யும்.  ஆமென்.