காலைத் தியானம் – ஜூலை 09, 2021

ஆகாய் 1: 12 – 15       

கர்த்தருடைய சத்தத்துக்கும் . . . ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள்            

                             இரண்டே அதிகாரங்கள் கொண்ட இந்த தீர்க்கதரிசன புத்தகம் வாசிக்கவே அருமையாக இருக்கிறது. இதுவரை தியானித்த எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் மக்களின் பாவ வாழ்க்கை, வரப் போகும் அழிவு, தண்டனை போன்றவைகளைக் குறித்தே வாசித்த பின்பு, ஆகாய் தீர்க்கதரிசியின் புத்தகம் வித்தியாசமாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? முதலாவதாக அழிவும் தண்டனையும் முடிந்தபின் கொடுக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசன நாட்களில் மக்கள் கர்த்தருடைய சத்தத்துக்கும், அவருடைய தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள். இரண்டாவதாக, இதில் ஆலயத்தையும் மக்களையும் கர்த்தர் மறுபடியும் கட்டியெழுப்பும் நாட்களைப் பார்க்கிறோம். உன்னுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் கட்டியெழுப்பும் நாட்கள் உண்டு. அந்நாட்களில் கர்த்தரே மன்னித்து மறந்துவிட்ட உன் கடந்த கால பாவங்களை நினைத்து வருந்த வேண்டாம். உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்.                    

ஜெபம்:

ஆண்டவரே, என் சுய நல சிந்தையை மாற்ற ஆண்டவரே, என் வாழ்க்கையில் நீர் தந்துள்ள கட்டியெழுப்பும் நாட்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.