காலைத் தியானம் – ஜூலை 10, 2021

ஆகாய் 2: 1 – 9       

இந்த பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்          

                             சாலொமோன் ராஜாவால் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட எருசலேமின் தேவாலயம் பாபிலோனியரால் கி.மு. 586ம் ஆண்டில் அழிக்கப்பட்டது. அப்போது ஆகாய் 14 வயது சிறுவன் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். ஆகாய் தீர்க்கதரிசனம் பெற்ற நாட்களில் (கி.மு. 520ல்) சாலொமோன் ராஜா கட்டிய ஆலயத்தைப் பார்த்திருந்தவர்கள் சிலரே உயிரோடிருந்திக்கவேண்டும். அப்படிப்பட்ட அந்த சிலரின் பார்வையில், இப்போது அவர்கள் கட்டிக்கொண்டிருந்த புது ஆலயம், பழைய ஆலயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்றுமில்லாதது போல காணப்பட்டது. ஆனால் கர்த்தர் சொல்லுவதைக் கவனியுங்கள். அவர், இந்த ஆலயத்தை என் மகிமையால் நிறையப்பண்ணுவேன்; முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் இந்த பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்றார். ஒரு ஆலயத்தின் சிறப்பு கட்டிடத்தின் அழகு அல்ல; கர்த்தருடைய பிரசன்னமும் அவருடைய மகிமையின் நிரப்புதலும் மட்டுமே ஆலயத்துக்கு அழகைக் கொடுக்கின்றது. உன் திருச்சபை கூடும் ஆலயம் எப்படி இருக்கிறது?                   

ஜெபம்:

ஆண்டவரே, எங்கள் ஆலயத்தையும் உம்முடைய மகிமையின் நிரப்புதலால் அழகாக்கியருளும். ஆமென்.