காலைத் தியானம் – ஜூலை 11, 2021

ஆகாய் 2: 10 – 19       

பரிசுத்தமாகாது . . .  தீட்டுப்படும்               

                             கர்த்தர் நம்மிடம் பூரண பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறார். ஆலய வேலை ஆரம்பித்து சில மாதங்கள் ஓடிவிட்டன; என்றாலும் கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடம் பூரண பரிசுத்தம் இல்லை என்று சொல்லுகிறார். சுத்தமான பாலில் சிறிதளவு தயிரைக் கலந்துவிட்டால், அது பாலாய் இருக்கமுடியாது. அதைப் போல பரிசுத்தத்தில் சிறிதளவு பாவத்தைக் கலந்தால், அது பரிசுத்தமாயிருக்க முடியாது. உன் வாழ்க்கையில் எல்லா பகுதிகளையும் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தொழிலில் அல்லது வேலையில் மாத்திரம் சிறிதளவு நேர்மை இல்லாவிட்டால் என்ன என்று நினைக்கிறாயோ? உங்கள் மனதிலே சிந்தித்துப் பாருங்கள் என்பது கர்த்தருடைய வார்த்தை! சிறிதளவு அசுத்தமும் இல்லாமல் முற்றிலும் பரிசுத்தமாய் இருந்தால் இன்னும் பெரியக் காரியங்களைக் காண்பாய்.                  

ஜெபம்:

ஆண்டவரே, சிறிதளவு அசுத்தம் கூட என் வாழ்க்கையைப் பாழாக்காதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.