ஆகாய் 2: 20 – 23
நான் உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன். . நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்
ஒரு ராஜாவின் முத்திரை மோதிரம் அவருடைய அறிக்கையிலும், கடிதங்களிலும், உத்தரவுகளிலும் பதிக்கப்படும். அவை ராஜாவிடமிருந்து வந்தவை என்பதற்கு அடையாளமே முத்திரை மோதிரம் தான். செருபாபேல் கர்த்தருடைய முத்திரை மோதிரமாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். அதற்குக் கர்த்தர், செருபாபேல் மூலமாகச் செயல்படுவார் என்று அர்த்தம். இன்னொரு விதமாகச் சொன்னால், செருபாபேல் பேசும் எல்லா வார்த்தைகளுக்கும், செய்யும் எல்லாச் செயல்களுக்கும் கர்த்தருடைய ஒப்புதல் இருக்கவேண்டும். தம்முடைய முத்திரை மோதிரமாக தெரிந்துகொள்ளும்படி கர்த்தர் இன்றும் பூமியெங்கும் தேடிக்கொண்டிருக்கிறார். நீ அதற்கு பாத்திரனாக வாழ்கிறாயா?
ஜெபம்:
ஆண்டவரே, இதோ அடியேன் இருக்கிறேன். என்னையும் உமது முத்திரை மோதிரமாகத் தெரிந்து கொள்ளும். ஆமென்.