காலைத் தியானம் – ஜூலை 13, 2021

சகரியா 1: 1 – 6       

உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்                            

                             சகரியா தீர்க்கதரிசி ஆகாய் தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இந்தப் புத்தகம் கி.மு. 480ம் ஆண்டளவில் எழுதப்பட்டது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள். சகரியாவும் எருசலேம் தேவாலயம் திரும்பக் கட்டப்படுவதைக் குறித்துப் பேசுகிறார். மேலும் 480 வருடங்களுக்குப் பின் வந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் இப்புத்தகத்தில் உண்டு. இன்று வாசித்த பகுதியிலிருந்து நாம் படித்துக்கொள்ளவேண்டிய முக்கியமான பாடம், நாம் நம் முன்னோர்கள் செய்த தவறை செய்யக்கூடாது என்பதுதான். நாம் நம் பெற்றோர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும், அதற்கு முன் வாழ்ந்த முற்பிதாக்களையும் மிகவும் மதிக்கிறோம்; கனம்பண்ணுகிறோம். அது மிகவும் அவசியமும் முக்கியமுமானது. அதே சமயம் அவர்கள் செய்த தவறுகள் நமக்குத் தெரிந்திருந்தால் நாம் அவற்றை செய்யக்கூடாது. நான் என் அப்பாவைப் போலிருப்பதில் என்ன தவறு என்று கேட்காதே.                 

ஜெபம்:

ஆண்டவரே, என் முற்பிதாக்களின் வாழ்க்கையிலிருந்து பின்பற்ற வேண்டியவைகளைக் கைக்கொண்டு, கைவிட வேண்டியவைகளைக் கைவிட எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.