சகரியா 1: 7 – 17
சிவப்புக் குதிரையின் மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்
குதிரையின் மேலிருந்தவன் கர்த்தருடைய தூதன். குதிரைகளும் அதின் நிறங்களும், உலக நாடுகள் அனைத்தும் கர்த்தருடைய ஆளுகைக்குட்பட்டது என்பதைக் குறிக்கின்றது. ஒவ்வொரு நிறத்தின் பொருளும் நமக்குத் தெரியாது என்றாலும், பொதுவாக சிவப்பு நிறக் குதிரை யுத்தத்தையும், வெள்ளை நிறக் குதிரை இறுதி வெற்றியையும் குறிக்கும். இஸ்ரவேலரின் சிறையிருப்பு 70 வருட காலம் நீடிக்கும் என்பதை ஏற்கனவே கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லியிருந்தார் (எரேமியா 25:11; 29:10). அந்த நாட்கள் முடிவடைந்தபடியால், இஸரவேல் மக்கள் சீக்கிரமாய் எருசலேம் திரும்ப கர்த்தர் வழி செய்யுமாறு தூதன் கேட்கிறான். வேதத்திலுள்ள ஒரு வார்த்தைகூட நிறைவேறாமல் போனதில்லை. வரும் நாட்களில் நிறைவேறவேண்டிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேறாமல் போவதில்லை.
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தும், நித்திய வாழ்வைக் குறித்தும் எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கும் வசனங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.