காலைத் தியானம் – ஜூலை 15, 2021

சகரியா 1: 18 – 21       

நாலு கொம்புகள் . . . நாலு தொழிலாளிகள்                                

                             நான்கு கொம்புகள் இஸ்ரவேலரையும் யூதாவின் மக்களையும் கைப்பற்றி ஒடுக்கிய நான்கு வல்லரசுகளைக் குறிக்கின்றது.  எகிப்து, பாபிலோன், அசீரியா, பெர்சியா ஆகியவைகளே அந்த நான்கு வல்லரசுகள். தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குப் பாடம் கற்பிக்கவே கர்த்தர் இந்த வல்லரசுகளை உபயோகித்தார். ஆனால் அந்த வல்லரசுகளும் பாவத்தையும் விக்கிரக வழிபாட்டையுமே வளர்த்தன. ஆகையால் அவ்வல்லரசுகளுக்கும் முடிவு கொண்டு வரவேண்டுமென்று கர்த்தர் தீர்மானித்துவிட்டார். நான்கு தொழிலாளிகள், வல்லரசுகளை வீழ்த்தும்படி கர்த்தர் நியமித்த சாதாரண நாடுகளைக் குறிக்கும். கர்த்தர் எளியவர்களைக் கொண்டு பலவான்களை வீழ்த்துகிறவர் என்பதை அநேக முறை வேதாகமத்திலும் சரித்திரத்திலும் பார்த்துவிட்டோம். ஆகையால் பணத்தின் பின்னும், பதவியின் பின்னும் குறுக்கு வழிகளில் ஓடாதே.               

ஜெபம்:

ஆண்டவரே, பண ஆசையும் பதவி ஆசையும் என்னைக் குறுக்கு வழிகளிலே கொண்டுபோய்விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்.