காலைத் தியானம் – ஜூலை 16, 2021

சகரியா 2: 1 – 8       

நீங்கள் எழும்பி . . . ஓடி வாருங்கள்                                

                             நான் தான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் நீங்கள் அங்கேயே இருந்துவிடவேண்டும் என்பது என் நோக்கமல்ல என்று இஸ்ரவேலரைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேலர் பாபிலோனில் இருந்து பழகிவிட்டார்கள். பாபிலோன் அழிக்கப்படுமுன் அதைவிட்டு சீக்கிரமாய் ஓடி வாருங்கள் என்ற எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் அழிவுக்குத் தப்பினார்கள். நமக்கு ஒரு இடத்தில் வேலை கிடைத்துவிட்டால் அங்கேயே இருந்துவிடுகிறோம். அந்த ஊரிலுள்ள நண்பர்கள், உறவினர்கள், வீடு, பள்ளிக்கூடம் போன்றவைகள் நமக்கு ஒருவிதமான பாதுகாப்பைக் கொடுத்துவிடுகின்றன. கர்த்தர் வேறே இடத்துக்குப் போகும்படி அழைத்தாலும் அதைக் கேட்க நாம் தயாராக இருப்பதில்லை. அது தவறு. நம்முடைய நித்திய குடியிருப்பு பரலோகத்தில் உள்ளது. அதுவரை கர்த்தர் காட்டும் இடத்துக்குப் போக – உடனே போக, நாம் தயாராக இருக்கவேண்டும்.             

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அழைப்புக்குத்  தயக்கமில்லாமல் உடனேயே  கீழ்ப்படியவேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும்.  ஆமென்.