காலைத் தியானம் – ஜூலை 17, 2021

சகரியா 2: 9 – 13       

நான் வந்து உங்கள் நடுவில் வாசம்பண்ணுவேன்                          

                             இன்று வாசித்த பகுதியில் 9 முதல் 11ம் வசனம் வரையுள்ள பகுதி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனம். பூமியில் அவர் மனிதனாக வந்து வாசம்பண்ணின நாட்களில் அவருடைய கிரியைகள், சேனைகளின் கர்த்தராகிய பிதா அவரை அனுப்பினார் என்பதை வெளிப்படுத்தின. கர்த்தர் யூதர்களுக்கு மாத்திரமே சொந்தம் என்று அதுவரை இருந்த எண்ணம் மாறி, ரோமர்களும், கிரேக்கர்களும், மற்றெல்லா நாட்டு மக்களும் கர்த்தரை அறிந்து கொண்டு அவருடைய மக்களானார்கள். இன்றும் பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் வாசம்செய்யும்படி அனுப்பப்பட்டுள்ளார். சேனைகளின் கர்த்தர் அவரை அனுப்பியுள்ளார். பரிசுத்த ஆவியானவர் உன் குடும்பத்தின் நடுவிலும் உன் உள்ளத்திலும் வாசம்செய்கிறாரா?             

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என் உள்ளத்தைவிட்டு விலகாமல் எப்போதும் என்னில் வாசம்செய்யும். ஆமென்.