காலைத் தியானம் – ஜூலை 18, 2021

சகரியா 3: 1 – 10       

சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவனது வலது பக்கத்திலே நின்றான்                              

                             இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோசுவா இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு பிரதிநிதி. இஸ்ரவேலரை மீட்கவேண்டுமென்பது கர்த்தருடைய விருப்பம். சாத்தானோ அவர்கள் அழிக்கப்படவேண்டுமென்று விரும்பினான். யோசுவாவின் அழுக்கு வஸ்திரம் இஸ்ரவேலரின் பாவ வாழ்க்கையைக் குறிக்கும். சாத்தான் அழுக்கு உடையைக் காட்டி, இஸ்ரவேலர் பரிசுத்த வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் என்று சொல்லுகிறான். கர்த்தரோ தம்முடைய சுத்தக் கிருபையால், அந்த அழுக்கு உடையைக் களைந்து எறிந்துவிட்டு, சுத்தமான உடையைக் கொடுக்கிறார். சாத்தான் நம்முடைய பாவங்களையும் சுட்டிக்காட்டி, நாம் பரலோகத்துக்குத் தகுதியற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். அப்படிப்பட்ட எண்ணம் உனக்கு வரும்போதெல்லாம், அந்த எண்ணம் சாத்தானிடமிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள். கர்த்தர் உன்னைக் கழுவி, சுத்தப்படுத்திவிட்டார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள். சாத்தானைத் திரும்பிக் கூட பார்க்காதே.             

ஜெபம்:

ஆண்டவரே, என் அழுக்கு உடையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சுத்தமான உடையால் என்னை மூடிவிட்டதற்காக நன்றி சுவாமி. ஆமென்.