காலைத் தியானம் – ஜூலை 20, 2021

சகரியா 4: 7 – 10       

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்?                 

                             இன்று கர்த்தருடைய வேலையைச் செய்யவேண்டும் என்று சொன்னால், ஒன்று பெரிய திருச்சபைகள், பெரிய கிறிஸ்தவ நிறுவனங்கள் போன்றவைகளில் வேலை செய்யவேண்டும் அல்லது பெரிய கூட்டம் போட்டு, தொலைக்காட்சிகளில் பார்ப்பதைப் போல ஆயிரக்கணக்கானோருக்குப் பிரசங்கம் செய்யவேண்டும் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். கர்த்தரோ அற்பமான ஆரம்பங்களை ஆசீர்வதிக்கிறவர். மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று கர்த்தர் சொல்லுவதை நினைவுபடுத்திக் கொள்வோம். அந்த வசனத்தில் ஒருவனுக்கு என்ற வார்த்தையைக் கவனியுங்கள். வறுமையிலிருக்கும் ஒருவனுக்கு உதவி செய்யுங்கள், மனக் கஷ்டத்தில் இருக்கும் ஒருவனோடு சேர்ந்து ஜெபியுங்கள். அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கும் ஒருவனுக்கு இயேசுவை அறிமுகப்படுத்துங்கள். கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் என்று நீ நினைக்கும் எல்லாருமே அற்பமான ஆரம்பம் உடையவர்கள்தான்.                                   

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய அற்பமான ஆரம்பத்தையும் ஆசீர்வதியும். ஆமென்.