காலைத் தியானம் – ஜூலை 22, 2021

சகரியா 5: 1 – 4       

பறக்கிற புஸ்தகச் சுருள்… திருடன்… பொய்யாணையிடுகிறவன்                        

                             பழைய ஏற்பாடு காலத்தில், புஸ்தகச் சுருளில்தான் கர்த்தருடைய வார்த்தை எழுதப்பட்டிருந்தது. கர்த்தருடைய வார்த்தை மனிதனை நியாயந்தீர்க்கும் என்பதை பறக்கும் புஸ்தகச்சுருள் சுட்டிக்காட்டுகின்றது. இரட்சிப்பைப் பெறாத அல்லது  மனந்திரும்பாத பாவிகள் அழிக்கப்படுவார்கள். பத்துக் கற்பனைகளில் சொல்லப்பட்டுள்ள இரண்டு பாவங்கள் இன்று வாசித்த பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீ கர்த்தருடையவைகளில் எதையாவது திருடுகிறாயா? அவருக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கையையும் நேரத்தையும் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதும் திருடு தான் (மல்கியா 3:8). எந்த சூழ்நிலையிலாவது பொய் ஆணை செய்ததுண்டா? இன்றே உன் பாவத்தை அறிக்கையிட்டு ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்றுக் கொள். நியாயத்தீர்ப்பு நாளில் மன்னிப்பைப் பெறமுடியாது.                                  

ஜெபம்:

ஆண்டவரே, நான் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உமக்கு விரோதமாகச் செய்துள்ள பாவங்களையெல்லாம் இப்பொழுதே மன்னியும். ஆமென்.