சகரியா 6: 9 – 15
தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார் . . ஆசாரியராயும் இருப்பார்
இன்று வாசித்த பகுதி, மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்த தீர்க்கதரிசனம். இயேசு மனித உருவில் பிறப்பதற்குக் கிட்டத்தட்ட 480 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தீர்க்கதரிசன வசனங்கள். இவை எழுதப்பட்ட நாட்களில் யூதாவில் ராஜா மக்களை ஆண்டு வந்தார். பிரதான ஆசாரியர் ஆன்மீகக் காரியங்களுக்குத் தலைமை வகித்தனர். இயேசுவே நிரந்தரமான ராஜாவாகவும் ஆசாரியராகவும் இருப்பார் என்ற தீர்க்கதரிசனத்தை எல்லாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறதில்லை. தங்களுடைய அடிமைத்தனங்களுக்கெல்லாம் முடிவைக் கொண்டு வரும் ஒரு பூலோக ராஜாதான் மேசியா என்று இஸ்ரவேல் மக்கள் நினைத்தார்கள். இன்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து சரியான புரிதல் இல்லாத கிறிஸ்தவர்கள் அநேகர் உண்டு. இயேசு கிறிஸ்து தம்முடைய சிங்காசனத்தின் மீது வீற்றிருந்து ஆளுகை செய்யும் நித்திய அரசாட்சியை நம் கண்கள் நிச்சயமாகக் காணும்.
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய இரண்டாம் வருகைக்காக நான் எப்போதும் தயாராக இருக்க உதவி செய்யும். ஆமென்.