சகரியா 7: 8 – 14
அவர்களோ கவனிக்க மனதில்லாமல்
தாம் விரும்பும் மனித குணங்களை மீகா தீர்க்கதரிசியின் மூலமாகச் சொன்ன ஆண்டவர் (மீகா 6:8), மறுபடியும் அவற்றை சகரியா தீர்க்கதரிசியின் மூலமாகச் சொல்லுகிறார். உண்மையாய் நியாயந்தீர்த்து, ஒருவருக்கொருவர் தயவும் இரக்கமும் காண்பித்து, விதவைகளையும் திக்கற்றவர்களையும் ஒடுக்காமல் வாழ வேண்டும் என்பது அவருடைய கட்டளை. இஸ்ரவேலரோ ஆண்டவர் சொன்னதைக் கேட்காமல் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டார்கள். அதன் விளைவு தான் 70 ஆண்டு கால அடிமை வாழ்வு. இன்று நாம் ஆண்டவருடைய வார்த்தையைப் பல மொழிபெயர்ப்புகளிலும், எண்ணற்ற பிரசங்கங்களிலும் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து அதற்குக் கீழ்ப்படி. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
ஆண்டவரே, அனுதினமும் நான் உம்முடைய வார்த்தையைத் தியானிக்கவும், உமது சத்ததைக் கேட்கவும், அதன்படி நடக்கவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.