காலைத் தியானம் – ஜூலை 28, 2021

சகரியா 8: 1 – 5       

திரும்பவும் கோலைப் பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்                                              

                             கர்த்தருடைய படைப்பாகிய நாம் ஒரே பருவத்தில் நிலைத்து விடுவதில்லை. குழந்தையாய்ப் பிறந்த நாம் இளவயதில் பல பாடங்களைக் கற்று, திறமைகளைப் பெற்று, நடு வயதில் பல காரியங்களைச் சாதித்து, முதிர்வயதில் பலருக்கும் உபயோகமாய் வாழ்ந்து நம்மைப் படைத்த ஆண்டவரிடம் திரும்பி சென்று விடுகிறோம். முதிர்வயது ஆண்டவருடைய ஆசீர்வாதம். வயதான பெரியவர்களின் ஆலோசனையும், ஆசீர்வாதமும், ஜெபமும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. யுத்தமும் அமைதியின்மையும் இருக்குமிடத்தில் துள்ளி விளையாடும் குழந்தைகளையும் சாந்த குணமுள்ள வயோதிபர்களையும் பார்ப்பது அரிதாகிவிடுகிறது.  கர்த்தர் தாமே நம் வாழ்க்கையை, மகிழ்ச்சியைக் கொடுக்கும் குழந்தைகளையும், ஞானத்தைக் கொடுக்கும் முதிர்வயதான பெரியவர்களையும் கொண்டு ஆசீர்வதிப்பாராக.                              

ஜெபம்:

ஆண்டவரே, எங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் முதிர்வயதான பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், நண்பர்களுக்காகவும் நன்றி சுவாமி.  ஆமென்.