காலைத் தியானம் – ஜூலை 29, 2021

சகரியா 8: 6 – 9       

உங்கள் கைகள் திடப்படக்கடவது                                              

                             பதினைந்து ஆண்டுகளாகக் கர்த்தர் பல தீர்க்கதரிசிகள் மூலமாக, எருசலேம் ஆலயம் கட்டப்படவேண்டும் என்று சொல்லிவந்தார். முதலில் நன்றாக ஆரம்பித்த இஸ்ரவேலர்கள், எதிர்ப்புகள் வந்ததும் சோர்ந்துவிட்டார்கள். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் மாத்திரம் போதாது; இப்போது செயல்படும் காலம் வந்துவிட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் வாழ்க்கையிலும் எதிர்ப்புகள் வந்து கொண்டேயிருக்கலாம். பிறருடைய வார்த்தைகளும் செயல்களும் உனக்கு மனச்சோர்வை உண்டாக்கலாம். ஆனால் நீ ஆண்டவரை மாத்திரம் விசுவாசித்து செயல்பட வேண்டும் என்பதே இன்றைய பாடம். நீ செயல்பட்டால் மாத்திரமே முடியாது என்று மனிதர்கள் நினைப்பதைக் கூட கர்த்தர் முடித்துக் காட்டுவார்.                              

ஜெபம்:

ஆண்டவரே, செயல்படுவதற்கு வேண்டிய துணிவையும், மன தைரியத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.