காலைத் தியானம் – ஜூலை 30, 2021

சகரியா 8: 10 – 13       

இப்போதே . . . திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்                                                   

                             கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்த நாட்களிலேயே நிலத்தைப் பண்படுத்தி அதைக் காக்கும் வேலையை மனிதன் கையில் கொடுத்துவிட்டார் (ஆதி 2:15). அது மாத்திரமல்ல, மனிதன் விதைத்து, நீர் பாய்ச்சி, பராமரித்தால் பூமி பலவிதமான நன்மைகளை அவனுக்குக் கொடுக்கும் என்ற நியதியையும் அவர் ஏற்படுத்தினார். நாட்கள் செல்லச் செல்ல, நிலம் தரும் நன்மைகளுக்குத் தன் உழைப்பு மட்டுமே காரணம் என்று மனிதன் நினைக்க ஆரம்பித்துவிட்டான். அது மாத்திரமல்ல, உலகத்தின் பல நியதிகளை உருவாக்கின கர்த்தரையே மறந்துவிட்டான். உன் உழைப்புக்கேற்ற பலனை நீ பெறாவிட்டால், உன் முயற்சியையும், உன் சூழ்நிலையையும், மற்ற மனிதரையும் குறை சொல்லுவதை நிறுத்திவிட்டு, உன் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி உன் ஆண்டவரிடம் கேள்.  ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்பதையும் கவனமாகக் கேட்டு செயல்படு.                                      

ஜெபம்:

ஆண்டவரே, என் முயற்சிகளை ஆசீர்வதியும். ஆமென்.