காலைத் தியானம் – ஆகஸ்ட் 01, 2021

சகரியா 8: 20 – 23      

தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்

                             ஒருவரைக் குறித்து கேள்விப்பட்டோம் என்று சொல்லுகிறவர்கள் அவரை நன்றாக அறிந்தவர்களாக இருக்கமுடியாது. தேவன் உங்களோடே இருக்கிறார் என்று மற்றவர்கள் சொல்லும்படி வாழவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். நம்மைத் தெரியாதவர்கள் இருக்கட்டும், நம்மைத் தெரிந்த பிறமதத்தினர் நம்மைக் குறித்து என்ன சொல்லுகிறார்கள்? தேவனுடைய வல்லமை நம் மூலமாக வெளிப்படுவதை அவர்கள் பார்க்கிறார்களா? அல்லது அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறார்களா? கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் தெரியவேண்டும். பக்கத்து பட்டணங்களில் இருப்பவர்கள் நம்மைப் பற்றி கேள்விப்பட்டு, நம்முடைய ஆண்டவரைத் தேடி நம்முடைய பட்டணத்துக்கு வரவேண்டுமாம். ஒரு சில கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் அந்த சிறப்பு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். நாம் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். உன்னுடன் வேலை செய்கிறவர்கள் மற்றும் உனக்கு அருகில் வசிப்பவர்கள் உன்னைக் குறித்து என்ன சொல்லுகிறார்கள்?                                    

ஜெபம்:

ஆண்டவரே, நான் உமக்குப் பெருமை கொண்டுவரும் வாழ்க்கை வாழ எனக்கு உதவிசெய்யும். ஆமென்.