காலைத் தியானம் – ஆகஸ்ட் 02, 2021

சகரியா 9: 1 – 8      

தீரு . . . சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்  

                            தீரு  கிட்டத்தட்ட கி.மு. 2750ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பட்டணம் என்று விக்கிப்பீடியா சொல்லுகிறது. வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உலகப் புகழ்பெற்ற துறைமுகங்களை வைத்துக்கொண்டு, உலக வர்த்தகத்தையே கலக்கிக் கொண்டிருந்த தீரு, சகரியா தீர்க்கதரிசி இந்த தீர்க்கதரிசனத்தைக் கண்ட நாட்களில் (கி.மு. 480), தூளைப் போல வெள்ளியையும் வீதியின் சேற்றைப்போல தங்கத்தையும் வைத்திருந்ததென்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட தீரு கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் விரோதமாகச் செயல்பட்டதால், அதின் பலன் முறிக்கப்பட்டு அக்கினிக்கு இரையாகும் என்று சகரியா தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர் சொன்னார். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பின் கி.மு. 332ம் ஆண்டில் மகா அலெக்ஸாந்தரால் தீரு கைப்பற்றப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இன்றும் தீரு லெபனோனின் ஒரு பகுதியாக இருக்கின்றது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒன்றாகிலும் பொய்யானதில்லை; பொய்யாகப் போவதுமில்லை.                                    

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின் வல்லமையை நான் ஒருபோதும் சந்தேகித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.