காலைத் தியானம் – ஆகஸ்ட் 03, 2021

சகரியா 9: 9 – 10      

இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்            

                            முதல் 8 அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள், கி.மு. 520 முதல் கி.மு. 518 வரையுள்ள நாட்களில் சகரியா தீர்க்கதரிசி பெற்ற தீர்க்கதரிசனங்கள்.  9ம் அதிகாரம் முதல் 14ம் அதிகாரம் வரை சொல்லப்பட்டுள்ளவை அவர் கி.மு. 480ம் ஆண்டில் பெற்ற தீர்க்கதரிசனங்கள். சகரியா 9: 1-10 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசங்கள் மூன்று வெவ்வேறு காலகட்டத்திற்கு உரியவை. நேற்று வாசித்த பகுதியில் சொல்லப்பட்டது 150 வருடங்களுக்குள் நிறைவேறிற்று. 9ம் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது கிட்டத்தட்ட 480 வருடங்களுக்குப் பின், இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையின் போது நிறைவேறிற்று. 10ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம், இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நிறைவேறும்.  அது கிட்டத்தட்ட 2500 வருடங்களாகியும் இன்று வரை நிறைவேறவில்லை. ஆனால் எந்த நேரத்திலும் நிறைவேறலாம். தயராக இரு.                                  

ஜெபம்:

ஆண்டவரே, நீர் மறுபடியும் பூமிக்கு உமது மகிமையில் வரும்போது நான் ஆயத்தமாக இருக்கும்படி என்னைப் பரிசுத்தப்படுத்தியருளும். ஆமென்.