காலைத் தியானம் – ஆகஸ்ட் 04, 2021

சகரியா 9: 11 – 17      

இதோ உன் ராஜா உன்உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்          

                            பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள் பலியிடப்படும் விலங்குகளின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டன. இன்று நாம் ஒப்பந்தங்களில் போடும் கையெழுத்தைவிட இரத்த முத்திரைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது உடைக்கப்படவும் மாற்றப்படவும் முடியாத ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கைக்கு அடையாளம். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் சிந்திய இரத்தம் அவர் நம்முடன் ஏற்படுத்தியுள்ள மாற்றமுடியாத புதிய உடன்படிக்கையின் முத்திரை.  இந்த முத்திரையின் ஒரு முன்னோடிதான் பழைய ஏற்பாட்டுக் காலத்து உடன்படிக்கையின் இரத்தம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய உடன்படிக்கையின் படியே, அவருடைய ஜனமாகிய நம்மைப் பாவத்தின் பிடியிலிருந்து மீட்டுக்கொண்டார் (வசனம் 16). அவருடைய கிருபை எத்தனை பெரியது! (வசனம் 17)                                 

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அன்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்.