காலைத் தியானம் – ஆகஸ்ட் 05, 2021

சகரியா 10: 1 – 6      

அவர்களிலிருந்து கோடிக்கல்லும், கூடார முளையும், யுத்தவில்லும் வரும்          

                            மறுபடியும் 480 ஆண்டுகளுக்குப் பின்வந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைப் பார்க்கிறோம். சகரியா தீர்க்கதரிசி இயேசுவைக் கோடிக்கல் (corner stone) என்று அழைக்கிறார்.  ஏசாயா தீர்க்கதரிசியும் இயேசுவைக் குறித்து ஏசாயா 28:16ல், இதோ அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன் என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கூறுகிறார். இயேசு என்ற அஸ்திபாரக் கல்லின்மேல் உன் வாழ்க்கையைக் கட்டுகிறாயா? அப்படிக் கட்டப்படும் வாழ்க்கை எப்படிப்பட்ட புயல் வந்தாலும் அசையாமல் இருக்கும். உலகம் தரும் பணம், பதவி, சொத்து ஆகியவைகளின்மேல் கட்டப்படும் வாழ்க்கை மணலின் மேல் கட்டப்பட்ட வீடு போல, பெருங்காற்றும் மழையும் வந்தவுடன் அழிந்துவிடும்.                                

ஜெபம்:

ஆண்டவரே, உம்மையே என் வாழ்க்கையின் அஸ்திபாரமாகக் கொண்டு வாழ எனக்கு உதவிசெய்யும். ஆமென்.