காலைத் தியானம் – ஆகஸ்ட் 06, 2021

சகரியா 10: 7 – 12      

அவர்களுக்கு இடம் போதாமற்போகும்          

                            சிதறிக் கிடந்த யூதர்கள் இணைக்கப்படுவார்கள் என்கிறார் தீர்க்கதரிசி. இது அந்த நாட்களில் வாழ்ந்த மக்களால் யூகித்துக்கூட பார்க்கமுடியாத காரியம். கர்த்தருக்குப் பிரியமான வழியில் நாம் நடக்கும்போது, நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் நமக்கே ஆச்சரியத்தைத் தரும். அவர் இடம் போதாமற்போகுமட்டும் நம்மையும் ஆசீர்வதிப்பார். கர்த்தருடன் நெருங்கி வாழ்ந்தால் மாத்திரமே அவருடைய விருப்பத்தின்படி வாழமுடியும். கர்த்தருடன் நமக்கு நெருக்கம் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்வதுதான் சாத்தானுடைய பிரதான வேலை. அவன் உன் உத்தியோகம், தூக்கம், நண்பர்கள், குடும்பத்தினர், உன்னுடைய நற்செயல்கள் போன்றவற்றில் எதையாகிலும் உபயோகித்து நீ ஆண்டவரோடு நெருங்கிவிடாதபடி பார்த்துக்கொள்வான். கர்த்தருடைய வசனத்தை வாசித்து தியானிக்கவும், அவரோடு பேசவும் ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை உபயோகிக்கிறாய் என்பது நீ அவரோடு கொண்டுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும்.                              

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. இன்னும் அதிகமாக உம்மோடு நெருங்கி வாழ உதவிசெய்யும். ஆமென்.